சென்னை: தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மதுரையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று சென்னை வந்தார். அப்போது. அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மேடைகளில் மட்டும்தான் அரசியல் என்று இல்லாமல், விருந்து தட்டுகளிலும் அரசியல் உருவாகலாம்.
நேற்று நல்ல விருந்து, நல்ல சாப்பாடு. எல்லா வகையான பாரம்பரிய உணவு வகைகள் உடன் விருந்தை நாங்கள் சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். டெல்லியில் தமிழக பெண் எம்பி சுதா செயின் பறிப்பு சம்பவம் நடந்தது தவறு தான். பெண்கள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.