சென்னை: குட் பேட் அக்லி படத்தில் பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தன்னுடைய பாடல்களை பயன்படுத்துவதை நிறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என குட் பேட் அக்லி படத் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், பாடல்களை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.
+
Advertisement