சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது. தங்கம் விலை கடந்த வாரம் அதிரடியாக உயர்வை சந்தித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன்...
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது. தங்கம் விலை கடந்த வாரம் அதிரடியாக உயர்வை சந்தித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு மறுநாளில் இருந்து தங்கம் விலை குறைய தொடங்கியது.
24ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து, ஒரு பவுன் ரூ.74,040க்கு விற்பனையானது. 25ம் தேதி பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.73,680 ஆகவும், 26ம் தேதி பவுனுக்கு ரூ.400 குறைந்து பவுன் ரூ.73,280க்கும் விற்றது. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. 28ம் தேதியும் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.73,280க்கு விற்பனையானது. 29ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.73,200க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 வரை குறைந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,680க்கு விற்றது. இதற்கிடையில் நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,170க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.73,360க்கு விற்றது. அதேபோல நேற்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.125க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.