சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.54,000-ஐ கடந்தது. தங்கம் விலை கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 3ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. 4ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,270-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.58,160-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.96.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.