Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 நாட்களாக சற்று குறைந்த நிலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சற்று குறைந்த நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன் பின்னரும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்திலேயே பயணித்தது. அந்த வகையில் கடந்த 17-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தை தொட்டது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த சூழலில், எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதேபோல் கடந்த 18-ந்தேதி அதிரடியாக தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலை சரிந்தது.

நேற்றைய நிலவரப்படி. கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 920-க்கும், ஒரு பவுன் ரூ.95 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெங்களூருவிலும் நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.95 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு இன்று அதிர்ச்சியே காத்திருந்தது. தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,180- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் விலை ரூ.97,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.