சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே நாளுக்கு நாள் அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. கடந்த சில நாட்களாக காலை, மாலை என மின்னல் வேகத்தில் உயர்ந்து அதிரடி காட்டியது. ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்ததால் நடுத்த மக்களுக்கு இனி தங்கம் வாங்குவது எட்டா கனியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1ம்தேதி பவுனுக்கு ரூ.87,600ஆக சில நாட்கள் நீடித்தது. கடந்த 6ம்தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 7ம்தேதி மேலும் உயர்ந்து ரூ.89,600 ஆனது. 8ம்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1480 அதிகரித்து ரூ.91,080க்கு விற்கப்பட்டது. நேற்று மேலும் அதிகரித்து ரூ.91,400க்கு விற்பனை ஆனது.
அந்த வகையில் நேற்று முன்தினமும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.11,260க்கும், பவுனுக்கு ரூ.1.320ம் குறைந்து ஒரு பவுன் ரூ.90,080க்கும் விற்பனையானது. நேற்று மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிரடி காட்டியது. நேற்று காலையில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,340க்கும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.90,720க்கு விற்பனையாகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒருவாரத்திற்கு மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.