சென்னை: வாரம் இறுதி நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 4 மற்றும் 5ம் தேதியான 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 வரை குறைந்தது. தொடர்ந்து 6ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,560க்கு விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் காலை, மாலை என கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ஒரு 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பிறகு நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் குறைந்தது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.90,160க்கும் விற்பனையானது. வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரை இரண்டாவது நாளாக நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் என்பது தெரியவரும்.

