தொடர்ந்து இறங்குமுகம் தங்கம் விலை 3 நாட்களில் பவுன் ரூ.1,760 குறைந்தது: போட்டி போட்டு வெள்ளி விலையும் குறைகிறது
சென்னை: கடந்த 23ம் தேதி தங்கம் விலை கிடுகிடுவென உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், மறுநாள் தங்கம் விலை ஏறிய வேகத்தில் குறைந்தது. அதாவது, கடந்த 24ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 குறைந்து ஒரு பவுன் ரூ.74,040க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.9,210க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.73,680க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,160க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.73,280க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கும், கிலோவுக்கு ரூ.2000 குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.