சென்னை: கடந்த மாதம் 14ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,840க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,110க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,880க்கும் விற்றது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.125க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனையானது.