சென்னை: தங்கம் விலை கடந்த 23ம் தேதி பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, பவுன் ரூ.75,040க்கு விற்பனையானது. இது அதிகப்பட்ச விலையாகும். மறுநாள் 24ம் தேதி தங்கம் விலை ஏறிய வேகத்தில் குறைந்தது. அதாவது பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. 25ம் தேதி பவுனுக்கு ரூ.360ம், 26ம் தேதி ரூ.400ம் குறைந்தது 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 280க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 150க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 200க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 வரை குறைந்துள்ளது.