சென்னை: தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்தது. வார தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,240க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது.
நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,145க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.73,160க்கும் விற்றது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.125க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனையானது.