சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,060க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.88,480க்கும் விற்கப்பட்டது. மாலையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.89,000க்கு விற்றது. தங்கம் விலை கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை வரை மட்டும் பவுனுக்கு ரூ.11,360 வரை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,200க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.89,600க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். ஆனால், நேற்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.167க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்றது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
+
Advertisement