சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் பவுனுக்கு ரூ.2880 சரிந்துள்ளது. இதேபோல, வெள்ளி விலையும் போட்டிப்போட்டு குறைந்து வருகிறது. கடந்த 14ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. 14ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,920க்கு விற்றது. தொடர்ந்து 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு பவுன் ரூ.92,400க்கும் விற்றது. தொடர்ந்து 2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 வரை குறைந்தது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது.
அதில் தங்கம் விலை மேலும் குறைந்திருந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்றது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2880 குறைந்துள்ளது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ெபாங்கல் என்று தொடர்ந்து பண்டிகை வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்றது.


