சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த வாரத்தின் தொடக்கநாளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.74,440 ஆக இருந்தது. தொடர்ந்து செவ்வாய் கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840க்கு விற்பனையானது. புதன்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120க்கு விற்பனையானது. நேற்றைய தினம் சவரன் ரூ.75,240க்கு விற்றது. இந்தநிலையில் இன்றைய தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,470-ஆகவும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.75,760 ஆகவும் உள்ளது.
மேலும், வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.131க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு காலையில் ரூ.520 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.520 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 9,535க்கும் சவரன் ரூ.76,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.76,000-ஐ தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.76,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.