Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

1 மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசா அறிமுகப்படுத்தியது அமெரிக்கா: இதை பெற எப்படி விண்ணப்பிப்பது?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 1 மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தினார். இந்த விசா திறமையானவர்களை தக்க வைத்து கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் அனுமதிக்கிறது. அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கான விசாக்கள் பல வகையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, ‘கிரீன் கார்டு’ என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், ‘கோல்டு கார்டு’ விசாவை அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இது வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தை பெற அனுமதிக்கிறது.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘இந்த கார்டு ஓரளவுக்கு ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது’ என்றார். இதற்கான விண்ணப்ப காலக்கெடு என்பது செயலாக்கக் கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் செயல்முறைக்கு ஒரு வாரங்கள் ஆகும். விண்ணப்பதாரர்கள் விசா நேர்காணலில் கலந்து கொண்டு ஆவண கோரிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்க வேண்டும். கோல்டு கார்டு விசாவை வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களை போலவே வரி விதிக்கப்படுகிறது. இதற்கு https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

எந்தவொரு விசாவையும் போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்கள் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசாவை ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கை துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகள் விண்ணப்பத்தில் சேர்க்கப்படலாம். ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்க கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.