மும்பை: தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வுத் துறை ரூ.102 கோடி அபராதம் விதித்தது. துபாயில் இருந்து ரன்யா ராவ் 127 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் வருவாய் புலனாய்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவுக்கு டி.ஆர்.ஐ. சிறையிலேயே நோட்டீஸ் வழங்கியது. அபராதத்தை செலுத்தாவிட்டால் நடிகை ரன்யா ராவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரன்யா ராவின் கூட்டாளியாக செயல்பட்டு 72 கிலோ தங்கம் கடத்திய டி.கே.ராஜுவுக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement