தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்: வருவாய் புலனாய்வு இயக்குனரகம் உத்தரவு
பெங்களூரு: துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 3ம் தேதி வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தங்கம் கடத்தி வந்த ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 250 பக்கங்கள் கொண்ட நோட்டீஸ் சிறையில் இருக்கும் ரன்யா ராவிடம் வழங்கப்பட்டுள்ளது. டிஆர்ஐ அதிகாரிகள் நேரடியாக சிறைக்கே சென்று ரன்யா ராவிடம் நோட்டீசை வழங்கினர். அதேபோல, இந்த வழக்கில் தொடர்புடைய தருண் கொண்டராஜுக்கு ரூ.63 கோடி, நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.