Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கம் விலை

சென்னை: பங்குச் சந்தைகளில் ஓரளவு மீட்சிப் போக்கு நிலவுவதால், தங்கம் மீதான முதலீடு குறையத் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை தறபோது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 14ம்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240-க்கும், கிராம் ரூ.9,115-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.9,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், 2-வது நாளாக தங்கம் விலை நேற்றும் குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.73 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.73 ஆயிரத்துக்கும் கீழ் குறைந் துள்ளது.