சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது.தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வாரம் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.96,560க்கு விற்பனையானது. தொடர்ந்து 2ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.96,320க்கு விற்றது.
3ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 60க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்து 480க்கும் விற்பனையானது. இதேபோல நேற்று முன்தினம் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.201க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்றது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,020க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு பவுன் ரூ.96,160க்கும் விற்றது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையும் குறைந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.200க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, பார் வெள்ளி 2 லட்சம் ரூபாய்க்கும் விற்றது.

