பாரத் மொபிலிடி குளோபல் எக்ஸ்போ எனப்படும் உலகளாவிய வாகன கண்காட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதமும் டெல்லியில் நடைபெற்றன. 3வது கண்காட்சி வரும் 2027ம் ஆண்டு டெல்லி என்சிஆரில் பிப்ரவரி மாதம் 4ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது.
இதில், பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், 3வது கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.