Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பே திறக்க தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

தண்டையார்பேட்டை: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்ைத பொங்கலுக்கு முன்பே திறக்க தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தை ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நிறுத்தமாக மாற்றுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தலைமை வகித்தார். வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில், மேம்படுத்தப்பட்டு வரும் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் நினை விடத்தில் உள்ள முதல்வர் படைப்பகம் முன்னேற்ற பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களை சந்தித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த கால ஆட்சியாளர்களால் போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப் பட்டது.

பேருந்துகளின் எண்ணிக்கை, பயனாளிகளின் எண்ணிக்கையை திட்டமிடாமல் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் பணி தொடங்கியுள்ளனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பயணிகளுக்கான கழிப்பிடம், ஓட்டுநர்களுக்கான தங்குமிடம், கடைகள், உணவகங்கள், பூங்காக்கள், இணைப்புச்சாலைகள், மழைநீர் வடிகால்கள் என பல்வேறு கட்டமைப்புகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் கடந்த சில தினங் களுக்கு முன்பு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்து ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு ஜனவரி மாத தொடக்க பகுதியிலேயே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறந்து வைத்தால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்னும் சில தினங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

நிகழ்வில், பெரம்பூர் எம்எல்எ ஆர்.டி.சேகர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் மற்றும் மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மாநகர போக்குவரத்து கழக பொதுமேலாளர் ராஜசேகர், மண்டல குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, சிஎம்டிஏ தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாவட்ட நூலக அலுவலர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலு வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.