சங்ககிரி: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே தெற்கு பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(48). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஜூன் 2ம் தேதி மகுடஞ்சாவடி அருகே உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த உறவினர் பெண்ணை கடைக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியவர் தொடர்ந்து இரண்டு முறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் நேற்று சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் (பொ) தனலட்சுமி எஸ்ஐ மல்லிகா ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜயகுமாரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement