Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நோ சொன்னால் தான் தப்பிக்க முடியும் சிறுமியாக இருக்கும்போதே பாலியல் தொந்தரவு கொடுத்த இயக்குனர்: நடிகை தேவகி பாகி வேதனை

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் இணை இயக்குனராக இருப்பவர் தேவகி பாகி. ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். இந்த நிலையில் கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மலையாள சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: நான் 7ம் வகுப்பில் படிக்கும்போது முதன் முதலாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்போது ஒரு உதவி டைரக்டர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அதன் பிறகு பிளஸ் ஒன் படிக்கும்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தின் டைரக்டர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.

அப்போது, சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான் என்றும், நடிகைகள் அனைவருமே இதைக் கடந்து தான் வந்துள்ளார்கள் என்றும் என்னிடம் ஏளனத்துடன் கூறினார். அது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக நான் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறி விட்டேன். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொன்னால்தான் இதிலிருந்து அனைவரும் தப்பிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.