திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தார். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒன்றரை வயது குழந்தை தர்ஷிணியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
+
Advertisement

