சென்னை: கிண்டி ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற பக்தர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை பஸ் நிலையம் அடுத்த ரவுண்டானா சந்திப்பு பகுதி வழியாக, கிரிவலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது அந்த வழியாக சென்ற பைக் மோதியது. அதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார்.
அதனால், பைக்கில் வந்த நபர் ஆத்திரமடைந்து, விஜயபாஸ்கரை சரமாரி தாக்கியுள்ளார். அதனால் சரிந்து விழுந்து மயங்கிய விஜயபாஸ்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் மோதியதை தட்டி கேட்ட பக்தரை, கடுமையாக நடுரோட்டில் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புகாரின்பேரில் க்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.