லண்டன்: சமீபத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயன்படுத்திய ஜெர்ஸி, தொப்பி உள்ளிட்ட பொருட்கள், அறக்கட்டளை நிறுவனம் ஒன்றுக்காக ஏலம் விடப்பட்டன.
அதில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பயன்படுத்திய ஜெர்ஸி ஆடை, அதிகபட்சமாக ரூ.5.41 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய வீரர்கள் பும்ரா, ஜடேஜா பயன்படுத்திய ஜெர்ஸிக்கள் தலா, ரூ. 4.94 லட்சத்துக்கு விற்பனை ஆகின. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பயன்படுத்திய தொப்பி, ரூ. 3.52 லட்சத்துக்கு ஏலம் போனது.