ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான RENK குழுமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் அதிநவீன ஆலையை தொடங்கியது!!
கிருஷ்ணகிரி : ஜெர்மனியின் renk குழுமம் கிருஷ்ணகிரியில் அதிநவீன உற்பத்தி ஆலையை தொடங்கி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டு நிறுவனமான கைடன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான RENK குழுமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் அதிநவீன ஆலையை தொடங்கியது. இந்திய ராணுவத்தின் அர்ஜுன் டேங்கிற்கு தேவையான உதிரி பாகங்களை அளிப்பதில் "ஐஎன்எஸ் விக்ராந்" போர் கப்பலுக்கு உதவுவது வரை இந்தியாவின் பாதுகாப்பு பயணத்தில் RENK ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஆலை, ராணுவம் மற்றும் சிவில் துறைகளுக்கு மேம்பட்ட தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குவதன் மூலம் தனது பயணத்தை தொடரும். இந்தியாவின் 2 பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்றான தமிழ்நாட்டை, துல்லியமான பொறியியல் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உயர்தர உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றும் வகையில் முன்னேறி வருகிறது."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.