Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெர்மனிக்கு நிகராக மின்னணுவியல், வாகனப் பொறியியலில் தமிழ்நாடு வலுவான அடித்தளம் கொண்டுள்ளது: ஜெர்மனி அமைச்சர் டிர்க் பான்டர் புகழாரம்

சென்னை: ஜெர்மனிக்கு நிகராக தமிழ்நாடு மின்னணுவியல், வாகனப் பொறியியல், மின்சார இயக்கம் ஆகியவற்றில் வலுவான அடித்தளம் கொண்டுள்ளது என ஜெர்மனி அமைச்சர் டிர்க் பான்டர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் ஜெர்மனி நாட்டின் சாக்சனி மாநில அரசு ஆகியவை தமிழ்நாடு-சாக்சனி வணிக மாநாட்டை நேற்று நடத்தியது. மாநாட்டில் தென்னிந்திய வர்த்தக சபை நிர்வாகக் குழுவின் உறுப்பினர் இன்பவிஜயன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு-சாக்சனி கூட்டாண்மை மாநாடு ஆனது இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கிய பங்களிக்கிறது.

தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை அடித்தளத்தையும், மேம்பட்ட உற்பத்தி மற்றும் புதுமைகளில் சாக்சனியின் உலகளாவிய தலைமையையும் இந்தக் கூட்டாண்மை ஈர்க்கிறது’’ என்றார். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த் கூறுகையில், ‘‘தமிழ்நாடு மற்றும் சாக்சனி இரண்டும் புதுமை, வலுவான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் நிலையான, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பால் இயக்கப்படுகின்றன. மேம்பட்ட உற்பத்தி, குறைக்கடத்திகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு, திறன் பயிற்சி, பால் மற்றும் உணவு பதப்படுத்துதல், பசுமை ஆற்றல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது’’ என்றார்.

சாக்சனி அமைச்சர் டிர்க் பான்டர் கூறியதாவது: சாக்சனியைப் போலவே, தமிழ்நாடும் மின்னணுவியல், குறைக்கடத்திகள், மின்சார இயக்கம் மற்றும் பொறியியல், குறிப்பாக வாகனத் துறையில் வலுவான அடித்தளத்தால் வகைப்படுத்தப்படுத்த கூடிய தொழில்துறை நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் திறமை சார்ந்த வளர்ச்சி மாதிரி ஆகியவை இந்தியாவின் மிகவும் மேம்பட்ட உற்பத்தி இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. நிலைத்தன்மை, பசுமை ஆற்றல் மற்றும் புதுமை ஆகியவற்றில் மாநிலத்தின் முன்னெச்சரிக்கை கவனம் சாக்சனியின் சொந்த வளர்ச்சி இலக்குகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது. இது எதிர்கால கூட்டாண்மைக்கும் இயல்பாகவே வழிவகை செய்கிறது. கட்டமைக்கப்பட்ட கூட்டாண்மைகள் மற்றும் நீண்டகால நிறுவன ஒத்துழைப்பு மூலம் தமிழ்நாட்டுடனான ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான தனது வலுவான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.