திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஷேர்ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் வந்தனர். நீண்டநேரமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தவர்களிடம் கிராம மக்கள் விசாரித்தனர். அதற்கு அவர்கள், ` கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வருகிறோம். கருவில் இருக்கும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்யும் இடத்தை தேடிவந்தோம்’ என தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவலின்படி எஸ்பி சியாமளாதேவி, மாவட்ட சுகாதார இணைஇயக்குனர், மாவட்ட சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் வந்து கர்ப்பிணிகளிடமும் விசாரித்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்டதாக திருப்பத்தூர் அடுத்த ராட்சமங்கலம் ேஜாதி (37), இவரது கணவர் சிவசக்தி (40), கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த கோவிந்தன் (47), ரஞ்சிதம் (39), அமலா (40) ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்ய ரூ.15 ஆயிரம் முன்பணம் வாங்கியதும் தெரியவந்தது.