Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜெமினி… ஜெமினி…ஜெமினி…

எங்கும் ஜெமினி எதிலும் ஜெமினியாக கூகுள் ஜெமினி AI (Gemini AI) உருவாக்கிய பனானா புகைப்படங்கள் டிரெண்ட் தற்போது இணையத்தை நிறைத்து வருகின்றன. இப்படித்தான் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி (ChatGPT) உருவாக்கிய ஜிபிலி (Ghibili) புகைப்படங்களால் இணையம் அதிர்ந்தது. தற்போது அந்த வரிசையில் இந்த ஜெமினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் உட்பட டிரெண்டிங்கில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இதில் Prompt எழுதத் தெரிந்திருக்க வேண்டும். மிகச் சரியாக புகைப்படம் எப்படி வேண்டுமென டைப் செய்தால் அப்படியே அச்சு அசல் ஸ்டூடியோ புகைப்படங்கள், 3டி சிலைகள் என உருவாக்குகிறது ஜெமினி.

சிம்பொனி சிகரம் தொட்ட தமிழனுக்குப் பாராட்டு!

இசையமைப்பாளர் இளையராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை​மை​யில் சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் பாராட்டு விழா நடை​பெற்றது.இசைஞானி இளை​ய​ராஜா தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500க்​கும் மேற்​பட்ட பாடல்களுக்கு இசையமைத்​துள்​ளார். கடந்த 1975 ஆம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜாவின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. மேலும் முழு மேற்​கத்​திய பாரம்​பரிய சிம்​பொனி இசை சிகரத்​தை​யும் தொட்டு சாதனை படைத்​தார். அவரை பாராட்டி கௌரவிக்கும் விதமாக இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிம்பொனி இசையும் மேடையில் நிகழ்த்தப்பட்டது. 87 இசைக் கலைஞர்கள் பலதரப்பட்ட இசைக்கருவிகள் வாசிக்க மேற்கத்திய சிம்பொனி இசை சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இளையராஜாவுடன் இணைந்து சிம்பொனி அமைத்தது தனக்கு பெருமை என சிம்பொனி மாஸ்டர் பீட்டர் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வுகளும், பிரபலங்களின் வாழ்த்து வீடியோக்களும் எங்கும் வைரலாகி வருகிறது.