காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள திட்டங்களை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி
டெல்லி: காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், ஒட்டுமொத்த மேற்கு ஆசியப் பகுதிக்கும் நீண்டகால, நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என பிரதமர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,