Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காசாவில் போர் முடிந்தும் கேட்ட துப்பாக்கி சத்தம்: 32 பேர் பலி நடந்தது என்ன?

காசா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையிலும் காஸாவில் வெடித்த உள்நாட்டு சண்டையில் 27 முதல் 32 பேர் இதுவரை கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச அமைதி பரிந்துரையின்படி போர் நிறுத்தப்பட்டு பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டன.

அதி தொடர்ப்பன காட்சிகள் வைரலாகி வருகின்றன. போரின்றி நிம்மதியாக வாழலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த காசா மக்கள் தலையில் இடி விழுந்தது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த திங்கள் அன்று ஹமாஸ் அமைப்பினருக்கும் காசாவின் ஆயுதமேந்திய குழுவான டக்லிஷ் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஸப்ரா பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 27பேர் முதல் 32 பேர் வரை கொல்லபட்டதாக தகவல் வருகின்றன.

இம்மோதலில் ஹமாஸ் ஆதரவு ஊடக பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிகின்றன. செல்வாக்கு மிகுந்த டக்லிஷ் பிரிவினர் காசாவில் நீண்டகாலமாக ஹமாஸுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இரு தரப்பினர் இடையே பலமுறை மோதல் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 2 ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஹமாஸ் இத மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வெடிகுண்டு சத்தமும் துப்பாக்கிசூடு சத்தமின்றி இனி நிம்மதியாக வாழலாம் என நிம்மதி பெருமூச்சு விட்ட காசா மக்களுக்கு இத்தகைய உள்நாட்டு சண்டை பேரிடியை இறங்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தரும் வகையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போராக மாறியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாபகுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் இந்த உள்நாட்டு மோதல் மேலும் அம்மக்களை கவலை அடைய செய்தது.