சென்னை: கேட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும், நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என கோழிக்கோடு ஐஐஎம் அறிவித்துள்ளது. கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்தவுள்ளது. மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும். இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனக். இவர்களுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 12ல் வெளியிடப்படும் என்று கோழிக்கோடு ஐஐஎம் அறிவித்துள்ளது. iimcat.ac.in எனும் வலைத்தளத்தில் சென்று ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement
