சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இதனால் சில இடங்களில் மொத்த எல்பிஜி லாரிகளில் சிலிண்டர்கள் ஏற்றுவது பாதிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டது. எனவே அது சட்டவிரோதமானது. இந்த எதிர்பாராத முன்னேற்றம் இருந்த போதிலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள எல்பிஜி சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தென்னிந்தியா முழுவதும் தங்கள் விநியோகங்கள் சாதாரணமாகவும் தடையின்றியும் இருப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளிக்கின்றன.
தற்போது, அனைத்து ஆலைகளிலும் இண்டேன், பாரத் காஸ் மற்றும் எச்பி காஸ் விநியோகஸ்தர்களிடமும் போதுமான எல்பிஜி இருப்பு உள்ளது. வாடிக்கையாளர்களின் தற்போதைய பண்டிகை காலத்தை பூர்த்தி செய்ய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவது சீராக தொடர்வதை உறுதி செய்ய தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.