கடலூர்: கடலூர் மாநகராட்சி 45 வார்டு பகுதிகள் கொண்ட நிலையில் நான்கு மண்டலங்களாக செயல்படுகிறது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் 3வது பிரிவு அலுவலகத்திற்கு நேற்று காலை குப்பைகளை சேகரிப்பதற்காக துப்புரவு பணியாளர் காமாட்சி (38) என்பவர் பேட்டரி வாகனத்தை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார்.
அப்போது வாகனத்தின் குப்பை கொட்டும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தலுக்கு அலுவலர்கள் பயன்படுத்தப்படும் பொருட்களாக மை, பேட்ச் உள்ளிட்டவை கிடந்தது. தகவலறிந்து வந்த தாசில்தார் மகேஷ், வருவாய் ஆய்வாளர் வைத்தியநாதன் குப்பை வண்டியில் இருந்த தேர்தல் அடையாள அட்டைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.