சித்தூர்: சித்தூர் அருகே பூங்காவில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் ெசய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சித்தூர் அருகே உள்ள ஒரு பூங்காவில் கடந்த 25ம் தேதி 16வயது சிறுமியும், அவரது காதலனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், தாங்கள் வனத்துறை போலீசார் என்றும், உங்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலனை, ஒருவர் பிடித்துக்கொண்டாராம். மற்ற 2பேர் அந்த சிறுமியை பூங்காவில் உள்ள புதருக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்களாம். அதைத்தொடர்ந்து, காதலனை பிடித்து வைத்திருந்த நபரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 3பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து சிறுமி சித்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை பலாத்காரம் செய்தது மகேஷ்(21), கிஷோர்(31), பிரசாத்(27) என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல் தொல்லை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.