சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சென்னையில் 1,519 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியது. சென்னை முழுவதும் 16,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். சிலைகள் உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 2 தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபட வேண்டுகோள் விடுத்துள்ளது.
+
Advertisement