சென்னை: கணேசன் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேற்று காலமானார். ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பாஸ்கரன் மதுரை திருநகரில் உள்ள பார்த்தசாரதி தெருவில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு கணேசன் ஐஏஎஸ், அசோக் என்ற மகன்கள் உள்ளனர்.
+
Advertisement
