மதுரை: காந்தி ஜெயந்தி விழா நேற்று மதுரை காந்தி மியூசியத்தில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாவட்டத் தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்டோர் நேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அவர்கள் மாலையோடு சேர்த்து காவித்துண்டையும் அணிவித்தனர். பாஜவினர் காவித்துண்டு அணிவித்த காட்சி வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் சமூகவலைதளங்களில் பரவ தொடங்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அகிம்சையை போதிக்கும் காந்தியை சுட்டுக்கொன்றே கோட்சே சார்ந்த அமைப்பினரின் சதிச் செயலை கண்டிப்பதாக கூறி பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
+
Advertisement