கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பகுதியில் எள் அறுவடை தீவிரமாக நடந்து வரும் நிலையில், வியாபாரிகள் எள் வாங்க ஆர்வம் காட்டாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளான காட்டு நாவல், துலுக்கன்பட்டி, புதுப்பட்டி, சுந்தம் பட்டி, மருங்கூரணி, நெப்புகை, மட்டங்கால், சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, பிசானத்தூர், புதுநகர், புனல்குளம் ஆகிய பகுதி விவசாயிகள் சுமார் ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் கருப்பு எள், சிவப்பு எள் பயிர் செய்துள்ளனர்.
இந்த எள் வயல்களில் அறுவடை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஏற்கெனவே 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட எள், தற்போது ரூ.80 வரை கொள்முதல் செய்வதுடன், விவசாயிகள் கொள்முதலில் ஆர்வம் குறைந்துள்ளது.
இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இது குறிந்து வியாபாரிகள் கூறுகையில், ‘எண்ணை ஆலை உரிமையாளர்கள் எங்களிடம் எள் கிலோ ஒன்று 80 ரூபாய்க்கு கேட்பதாகவும் வாங்கி வைத்த எள் நஷ்டம் அடையும் சூழ்நிலையில் உள்ளது. இதனால், நாங்கள் கூடுதல் விலைக்கு எள் கொள்முதல் செய்யமுடியாத நிலை உள்ளது என்றனர்.