*சீரைமக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கந்தர்வகோட்டை : கத்தர்வகோட்டை ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சிவன் கோவில் சாலையை சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் செல்லும் சாலை தஞ்சை சாலை முதல் கோவில் வரை 1.5 கிலோமீட்டர் தூரம் மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் மக்கள் சிரமம் அடைகிறார்கள். மேலும் இந்த சாலை வழியே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்றம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உழவர் சந்தை வேளாண்மைதுறை அலுவலகம், தோட்டகலை அலுவலகம், அரசு நியாயவிலை கடை என உள்ளது.
மேலும் இந்துசமய அறநிலைதுறைக்கு உட்பட்ட சிவன் ஆலயத்தில் பிரதோச விழா, தேய்பிறை காலபைரவர் வழிபாடு, முற்றோதல்,என வார வாழிபாடுகளும், மேலும் முகூர்ந்த நாட்களில் திருமணம், காதணிவிழா என சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் ஆயிரகணக்கில் ஆலயத்திற்கு மக்கள் வந்து செல்லும் சாலையை சம்பந்தபட்ட துறையினர் சீர்செய்து மக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
