புதுடெல்லி: சமீபத்தில் பாகிஸ்தானுடனான 4 நாள் போரின் போது டிரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. பாகிஸ்தான் ராணுவம் அதிகளவிலான டிரோன்களை ஏவியது. இதே போல, ரஷ்யா-உக்ரைன் போரிலும் டிரோன்கள் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை சார்பில் மத்தியபிரதேசத்தின் தேகான்பூரில் உள்ள படை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் டிரோன் போர் பயிற்சிப் பள்ளி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆளில்லா வான்வழி விமான செயல்பாடுகள், டிரோன் எதிர்ப்பு போர் மற்றும் கண்காணிப்பு, உளவு தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட 5 சிறப்பு பயிற்சிகள் மூலம் டிரோன் கமாண்டோக்கள் மற்றும் டிரோன் வீரர்கள் தயார்படுத்தப்பட உள்ளனர்.
+
Advertisement