வாஷிங்டன்: அமெரிக்க அரசு செலவினங்கள் தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொர் ஆண்டும் நிறைவேற்றப்படும். இந்த மசோதா மூலமாகவே அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில், அமெரிக்க செனட் சபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், நிதி மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நள்ளிரவு அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற பணிகளாள கருதப்படும் துறைகளில் பணியாற்றும் 7,50,000 அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளனர்.
+
Advertisement