ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காரை காட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்(20). இவரது நண்பர்கள் ஆற்காடு காந்தி நகரை சேர்ந்த பாலமுருகன்(19), வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ஷாஜகான்(26). இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களான 3 பேரும் நேற்று அதிகாலை மொபட்டில் நவல்பூரில் இருந்து காரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ரயில்வே புதிய மேம்பாலம் மீது சென்றபோது, எதிரே வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் திடீரென இவர்களது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். காரின் முன்பகுதி மற்றும் மொபட் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த டிரைவர் உட்பட 4 பேர் காயமின்றி தப்பினர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


