மதுரை: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளார் டிரம்ப் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; ரஷ்யாவிடம் பெட்ரோலிய பொருள்கள் வாங்குவது இந்திய அரசா? மோடியின் நண்பரா?. யாருடைய விசுவாசத்துக்காக பெரு நஷ்டத்தை இந்திய தொழில்கள் சந்திக்கின்றனர்?. இந்தியாவின் சுதந்திர கொள்கை மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் டிரம்பையும் எதிர்க்க வேண்டும். நண்பர்கள் நலனில் அக்கறை செலுத்தும் மோடியையும் எதிர்க்க வேண்டிய நேரமிது என அவர் தெரிவித்தார்.
+
Advertisement