திருவள்ளூர்: திருவள்ளூர் எகத்தூர் இடையே நேற்று காலை 5:10 மணி அளவில் சரக்கு ரயில் தடம்புறண்டு 18 பேட்டிகள் எரித்து நாசமானது. 7 மணி நேரம் பிறகு தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை தொடர்ந்து மீட்பு பணிகளானது 22 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நேற்று முழுவதும் அரக்கோணம் சென்னைக்கு இடையே ரயில்சேவை பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் 22 மணி நேரம் கழித்து தண்டவாள பகுதியான 3 , 4க்கு சரிசசெய்யப்பட்டு அந்த தண்டவாள பகுதியில் அதிவேக ரயில்கள் புறநகர் ரயில்கள் ஆனது தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 10:15 மணி அளவில் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் ரயிலானது இயக்கப்படதை தொடர்ந்து பாலகுழா , பாலக்காடு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை நிலவரப்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது இந்த வழியில் இயக்கபட்டிக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்ல கூடிய வந்தே பாரத் ரயில்களும் இயக்கபட்டிருக்கிறது. புறநகர் ரயில்களும் அடுத்தடுத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் இந்த விபத்து ஏற்பட்ட தண்டவாளதில் ஒன்று இரண்டு பகுதிகளில் இன்னும் சீர்மைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூன்று ,நன்கு தண்டவாள பகுதியில் மாற்றம் செய்து இரண்டு ரயில்கள் ஆனது இயக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக புறநகர் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆனது தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த மீட்புப்பணியால் அதிநவீன ராட்சஷ கிரேன்கள் உதவியோடும் நேற்று தண்டவாள பகுதியில் விழுந்த 18 பெட்டிகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த தண்டவாள பகுதியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன இன்று மதியம் முழுமை பெரும் என தகவல் ஆனது வெளியாகியிருக்கின்றன. அதன் பிறகு இரு மார்க்கமாக வழக்கம் போல் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.