Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இலவச ரேஷன் தகுதியற்ற 2.25 கோடி பேர் நீக்கம்

புதுடெல்லி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எப்எஸ்ஏ) ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தகுதியான பயனாளிகள் மட்டும் பயனடைவதை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் கடந்த 4 அல்லது 5 மாதத்தில் தகுதியற்ற 2.25 கோடி பயனாளிகள் நீக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய உணவு அமைச்சக உயர் அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.

இவர்கள், சொந்தமாக 4 சக்கர வாகனங்கள் வைத்திருந்தல், மாத வருமான வரம்புக்கு மேல் உள்ளவர்கள், நிறுவனங்களில் இயக்குநர் பதவி வகிப்பவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் சிலர் இறந்த பயனாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.