ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டியை ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். ஆவடி தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பட்டாபிராம் சேக்காடு தண்டுறை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஆர்சிஎம் மேல்நிலைப்பள்ளி, என 2 பள்ளி சுமார் 300 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார். மொத்தம் சுமார் 150 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர், ஆவடி மாநகராட்சி 46 வது மாமன்ற உறுப்பினர் மீனாட்சி குமார் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கு கலந்து கொண்டனர்