Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் உத்தரவின் பேரில் 1018 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

*ராசா எம் பி. வழங்கினார்

ஊட்டி : தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு முதன்முறையான 1018 இலவச வீட்டுமனை பட்டாக்களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா வழங்கினார். மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் உள்ளிட்ட 6 வகை பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

மலை மற்றும் வனம் சார்ந்தும் உள்ள பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனை ெதாடர்ந்து நீலகிரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 47 ஆண்டுகளுக்கு பின் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வரவேற்றார்.

கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, தமிழக அரசின் தலைமை கொறடா ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மொத்தம் 1018 பேரில் முதற்கட்டமாக 768 பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை நீலகிரி தொகுதி எம்பி., ராசா வழங்கினார். பின்னர் ரூ.7.52 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்: இந்த நீலகிரி மலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யாருக்கு சொந்தம் என்றால் பழங்குடியின மக்களான உங்களுக்கு மட்டும் தான்.

இங்குள்ள வனம் மற்றும் வளங்களை பல தலைமுறைகளாக காப்பாற்றி இயற்கை எழிலை ஒரளவிற்கு சிதையாமல் இன்றளவும் காப்பாற்றி வருவது வனத்துறை மட்டுமல்ல பழங்குடிகளான நீங்களும் தான். அப்படிப்பட்ட சிறப்புகுரிய உங்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் என்னனென திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள்.

பழங்குடி மக்கள் வசிக்க கூடிய பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் 23 சமுதாய கூடங்கள் அமைக்க உத்தரவிட்டார். மேலும் கலைஞர் நகர் என்ற புதிய திட்டத்தை அறிவித்து, இதனை நிறைவேற்ற ரூ.28 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

அனைத்து சுற்றுலாத்தலங்களையும் கண்டு ரசித்து மீண்டும் ஏறிய இடத்தில் இறக்கி விடுவது போல் நீலகிரி மாவட்டத்திலும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒரே கட்டணத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கும் திட்டத்தையும் அறிவித்தார். இந்த பஸ்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். ரூ.25 கோடியில் ஊட்டியில் மல்டிபிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்கென தனி கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. இவற்றை பாதுகாத்து உலகறிய செய்யும் நோக்கில் ரூ.10 கோடியில் பழங்குடியினர் அருங்காட்சியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் பழங்குடியின மக்களுக்கு மட்டும் 1500 வீடுகள் கட்டப்பட உள்ளது.சிறப்பு திட்டமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக பழங்குடியின மக்களுக்காக மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 1018 தனித்தனி பட்டாக்கள் வழங்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் டிஆர்ஒ., சார் ஆட்சியர், ஆர்டிஒ., உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழக வரலாற்றில் முதன்முைறயாக ஒரே சமயத்தில் அதிகளவில் பழங்குடியின மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்பைட ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக நமது அரசும், நமது முதல்வரும் உள்ளார். மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கும் முதல்வருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மவட்ட வன அலுவலர் கௌதம், சார் ஆட்சியர் சங்கீதா, ஊட்டி ஆர்டிஒ., சதீஸ்குமார், ஊட்டி நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.