பிரஸ்ஸல்ஸ்: ரூ.13 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் மெகுல் சோக்சியை நாடு கடத்த பெல்ஜியம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அவர் தலைமறைவானார். அவர் ஆன்டிகுவா தீவில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், ஆன்டிகுவா தீவில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக அவர் பெல்ஜியம் வந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் பெல்ஜியத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் பெல்ஜியத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் நாடு கடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்த பெல்ஜிய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அவரது கைது செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிகிறது.
+
Advertisement
